spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!

-

- Advertisement -

நடிகை அஞ்சலி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவர், மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பறந்து போ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஏழு கடல் ஏழு மலை, மகுடம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி! இந்நிலையில் நடிகை அஞ்சலி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டியுடன் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளார். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அஞ்சலியை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி, “ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகிறது. அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ