சதீஷ் நடிக்கும் முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதே சமயம் இவர் ‘நாய் சேகர்’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது ‘சட்டம் என் கையில்’ எனும் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சதீஷ், ‘கான்ஜுரிங் கண்ணப்பன் 2’ எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், முஸ்தபா முஸ்தபா எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரவீன் சரவணன் இயக்க சதீஷ் உடன் இணைந்து சுரேஷ் ரவி, குக் வித் கோமாளி புகழ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜோன்ஸ் ரூபர்ட் இதற்கு இசை அமைக்கிறார்.
கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்தப் படத்தை தி மபோகோஸ் கம்பெனி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கின்ற நிலையில் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த போஸ்டரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், கூகுள் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் கான்பிடென்டல் டாப் சீக்ரெட் என்று எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகமும் காட்டப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இது சமூக ஊடகங்கள் குறித்த படமாக இருக்கும் போல் தெரிகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


