தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “விடுதலை-பாகம் 1“. மலைவாழ் மக்களை காவல்துறை எப்படி நசுக்குகிறது மற்றும் அம்மக்களைச் சுற்றி நடக்கும் அரசியல் பிரச்சினைகளைத் தெளிவாகப் பேசியிருந்த படம் “விடுதலை-பாகம் 1”. படத்தில் மக்கள் போராளியாக “வாத்தியார்” கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடக்கத்தில் ஒரே படமாக தான் விடுதலை எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த கதையானது ஒரே படத்தில் கூறி முடித்து விட முடியாது என்பதால் படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் சற்று குறைவாகவே இருந்தன. ஆனால் விடுதலை -பாகம் 2ல் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அதிகமாக இடம்பெறும் எனவும் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டது.
இந்நிலையில் தான் விடுதலை படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்து வெற்றிமாறன் கூறியுள்ளார். விடுதலை ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு சிறிய பட்ஜெட் படமாக 4.5 கோடி மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால் விடுதலை படத்தின் முதல் பாகத்தை மட்டும் எடுத்து முடிப்பதற்கு 65 கோடி ரூபாய் செலவானது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்த செலவானது திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாகும். முதல் பாகத்திற்கு மட்டுமே இவ்வளவு செலவானது என்பதுதான் ஆச்சரியத்திற்குரியது. தற்போது இரண்டாம் பாகமும் அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. விடுதலை இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.
Viduthalai (Part-1) initially started with 4.5crs budget and finally it went onto 65crs
I didn’t have any clue of what I’m going to shoot & I still don’t know what I’m doing in this film👀
– VetriMaaran pic.twitter.com/eHYnEGUKPj— AmuthaBharathi (@CinemaWithAB) December 9, 2023
எஞ்சி இருக்கும் காட்சிகள் மட்டும் தான் தற்போது படமாக்கப்படுகின்றன. வெற்றிமாறன் இந்த பட்ஜெட் குறித்து கூறுகையில் “நான் எதைப் படம் எடுக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை, நான் எதை படமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இன்று வரை இப்படத்தில் நான் என்ன செய்கிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை” என்று அவருடைய பாணியில் கூறியுள்ளார். விடுதலை- பாகம் 2, கோடை 2024இல் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.குறைவான பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட விடுதலை படத்திற்கே இவ்வளவு செலவாகியுள்ளது என்றால், ஆரம்பிக்கப்பட்ட போதே அதிக பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” படத்தின் பட்ஜெட் எவ்வளவு ஆகுமோ என்று ரசிகர்கள் வலைத்தளங்களில் முணுமுணுத்து வருகின்றனர்.


