spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் 'வேட்டையன்' படக்குழு!

தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் ‘வேட்டையன்’ படக்குழு!

-

- Advertisement -

ரஜினியின் வேட்டையன் படக்குழு தமிழ் புத்தாண்டு தினத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் 'வேட்டையன்' படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் நிறைய பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேட்டையன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் 'வேட்டையன்' படக்குழு!அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் பகத் பாசில் ரஜினிக்கு மகனாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக ராணா டகுபதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை, நாகர்கோவில், ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் 'வேட்டையன்' படக்குழு!அதன்படி இந்த படம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகிறதா அல்லது தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறதா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ