Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைந்த மாஸ் கூட்டணி..... 'வேட்டையன்' படத்தில் இருந்து அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியீடு!

மீண்டும் இணைந்த மாஸ் கூட்டணி….. ‘வேட்டையன்’ படத்தில் இருந்து அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியீடு!

-

வேட்டையன் படத்தில் இருந்து அமிதாப் பச்சன் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது.மீண்டும் இணைந்த மாஸ் கூட்டணி..... 'வேட்டையன்' படத்தில் இருந்து அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரஜினி, போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங், ரக்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இன்று (செப்டம்பர் 20) இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் படக்குழுவினர் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரித்திகா சிங் ரூபா என்ற கதாபாத்திரத்திலும், டி
துஷாரா விஜயன் சரண்யா என்ற கதாபாத்திரத்திலும், மஞ்சு வாரியர், தாரா என்ற கதாபாத்திரத்திலும், பகத் பாசில், பேட்ரிக் என்ற கதாபாத்திரத்திலும், ராணா டகுபதி, நட்ராஜ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அடுத்தது அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் கூட்டணி 30 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ