Homeசெய்திகள்சினிமாஎதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் வேட்டையன் பட நடிகை!

எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் வேட்டையன் பட நடிகை!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் வேட்டையன் பட நடிகை! இந்த படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரித்திகா சிங் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு வேட்டையன் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதே சமயம் தனக்கு நிறைய ஆசைகள் இருப்பதாகவும் அதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் வேட்டையன் பட நடிகை! “நான் மும்பை பொண்ணுதான். தமிழ் பொண்ணு இல்லை. ஆனால் என்னை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

நடிகை ரித்திகா சிங், மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்தது வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ