Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், அபிராமி, பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மனசிலாயோ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் மாலை 6 மணி அளவில் நடைபெறும் என படக் குழுவினர் புதிய போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ