Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்தில் இருந்து ரித்திகா சிங் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

‘வேட்டையன்’ படத்தில் இருந்து ரித்திகா சிங் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

வேட்டையன் படத்திலிருந்து ரித்திகா சிங் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.'வேட்டையன்' படத்தில் இருந்து ரித்திகா சிங் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகை ரித்திகா சிங் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவலிங்கா, அசோக் செல்வனின் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். கடைசியாக இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதற்காக இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதை தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் கதாபாத்திரத்தின் அறிமுக போஸ்டரை பட குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரித்திகா சிங் ரூபா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மற்ற நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ