விடாமுயற்சி படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை மீகாமன், தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அடுத்தது இந்த படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், அர்ஜுன், திரிஷா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அடுத்தது இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் எனவும் விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் ஹேண்ட்ஸம் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். இது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.