சினிமா

தென்காசியில் நடைபெறும் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு!

Published by
Yoga
Share

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.தென்காசியில் நடைபெறும் 'விடுதலை 2' படப்பிடிப்பு! இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பினால் விடுதலை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது. அதேசமயம் விடுதலை 2 படமானது எப்போது ரிலீஸ் ஆகும் எனவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது. விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தென்காசியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஆக்ஷன் காட்சிகளும் கிளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதைத் தொடர்ந்து இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த பின்னர் வெற்றிமாறன் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார் என்று நம்பப்படுகிறது.

Show comments
Published by
Yoga
Tags: Cinema Shooting Tenkasi Viduthalai 2 சினிமா தென்காசி படப்பிடிப்பு விடுதலை 2