பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்ததும் கண் கலங்கியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த நானும் ரௌடி தான் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படம் 2025 செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 14) ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நடிகர் ரஜினி திரைத்துறையில் நுழைந்து 50 வருடங்களை நிறைவு செய்ய உள்ளார். இதன் காரணமாக திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் விக்னேஷ் சிவனும் ரஜினியை முதன் முறையாக சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன்முறையாக சந்தித்தபோது தான் கண் கலங்கியதாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினி கிளீன் ஷேவ் செய்து வேற மாதிரியான லுக்கில் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.