பிரபல இயக்குனர் மிஸ்கின் , சைக்கோ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். அதேசமயம் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மாவீரன், விஜய்-ன் லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பாக விஜய் சேதுபதியின் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக மிஸ்கின் அறிவித்திருந்தார். அதன்படி ட்ரெயின் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன. மிஷ்கினின் 11வது படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் ட்ரெயின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ட்ரெயின், ட்ரெயின் தண்டவாளம் போன்றவை காண்பிக்கப்படுகிறது. எனவே ட்ரெயின் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஜவான் படத்திற்கு பிறகு மெரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழில், விடுதலை இரண்டாம் பாகம், மகாராஜா, VJS51 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாள படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.