spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா20 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் இணையும் ஜெய்..... லேட்டஸ்ட் அப்டேட்!

20 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் இணையும் ஜெய்….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், வையாபுரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். மேலும் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார். படத்தின் கதாநாயகி குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் தமன்னா, கிருத்தி செட்டி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

we-r-hiring

அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தைப் போல அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு CSK என்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
தற்போது வெங்கட் பிரபு இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு, விஜய் மற்றும் ஜெய் இருவரின் கூட்டணி தளபதி 68 இல் இணையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு, இரண்டு வாரங்கள் கழித்து தனது 68வது படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ