லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் நான் ரெடி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் சஞ்சீதத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சஞ்சய்தத் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த சூழலில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாய் அல்லது மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.