விஜய் ஆண்டனி ஜென்டில்வுமன் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் சைத்தான் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனராகவும் உருவெடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கினார். தற்போது தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து, நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் ஏற்கனவே வள்ளி மயில், ககன மார்கன், சக்தித் திருமகன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் வெளியான ஜென்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.