Homeசெய்திகள்சினிமாமழை பிடிக்காத மனிதன்... ரிலீஸ் அப்டேட் இதோ...

மழை பிடிக்காத மனிதன்… ரிலீஸ் அப்டேட் இதோ…

-

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் கொலை, ரத்தம், ஆகிய படங்கள் வௌியாகி வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து ரோமியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மழை பிடிக்காத மனிதன் என்று தலையிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டது, ஆனால், படம் வெளியாகவில்லை. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ், ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசை அமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை பார்த்துள்ளார்.

இதனிடையே இப்படத்தின் தலைப்பை மாற்றவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மழைபிடிக்காத மனிதன் தலைப்புக்கு பதிலாக, சலீம் 2 என தலைப்பு வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்மையில் படத்தின் டப்பிங் உள்பட பின்னணி வேலைகளும் தொடங்கி நடைபெற்றன. இந்நிலையில், இத்திரைப்படத்தை கோடை விடுமுறையில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ