விஜய் ஆண்டனியின் 26வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர விஜய் ஆண்டனி, வள்ளி மயில், சக்தித் திருமகன், மார்கன் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் மார்கன் திரைப்படம் அடுத்த மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் ஆண்டனி, ஜென்டில்வுமன் பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியானது.
அதன்படி ஜோஸ்வா சேதுராமன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வருகின்ற மே 19ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் ஆண்டனியின் 26வது படமாக உருமாகும் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -