spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமலாக்கத் துறை வியக்கும் தமிழனே... போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் ரசிகர்கள்!

அமலாக்கத் துறை வியக்கும் தமிழனே… போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பல தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பாக கூட தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தது மட்டுமின்றி நாளைய வாக்காளர்களான ஒவ்வொரு மாணவர்களும் அவரவர் பெற்றோர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுமாறு அறிவுரை வழங்கினார்.

we-r-hiring

இம்மாதிரியான செயல்களினால் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று திரை உலக நடிகர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களில் பலர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தின் நான் ரெடி பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் நான் ரெடி தான் வரவா? என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடல் வரிகளும் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 22 விஜய்யின் 49வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை, உசிலம்பட்டி பகுதிகளில் விஜயின் ரசிகர்கள் அரசியல் வசனங்களுடன் பல போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அந்த போஸ்டர்களில் “நாங்கள் வணங்கும் தலைவா, நாளைய தமிழகத்தின் முதல்வா”…

“நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

“மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தே தீரும்”

“அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே…
ஆண்டவர்- ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வனே!”
போன்ற அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இது போன்ற போஸ்டர்கள் விஜயின் ரசிகர்களால் ஒட்டப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

MUST READ