பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாய கருவிகளை வழங்கி, விருந்து வைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் எடையூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கௌவுரவிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணி சார்பில் 365 நாளும் உழைக்கும் விவசாயிகளின் உழைப்பிற்க்காகவும்,உணவு தாணியங்களை உருவாக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக,விவசாயத்திற்கு தேவையான கடப்பாரை , மண்வெட்டி, அரிவாள், கலை எடுப்பான், உள்ளிட்ட கருவிகளை வழங்கியும் தென்னை மர கன்றுகளை வழங்கி நன்றி செலுத்தினர்.
மேலும் பொங்கலை முன்னிட்டு சோறு போடும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அறுசுவை விருந்து வைத்து நன்றி செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.