spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கூட்டணி

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கூட்டணி

-

- Advertisement -

“தளபதி-67” ப்ரோமோ படப்பிடிப்புக்காக இரண்டு நாட்கள் காஷ்மீர் சென்று வந்தது படக்குழு.

தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய்யின் அடுத்த படமான 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து, இந்த படத்தின் மூலம் 2-வது முறையாக விஜய்-லோகேஷ் கூட்டணி உருவாகிறது.

we-r-hiring

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தளபதி-67 படத்தின் பூஜை கடந்த டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

‘விக்ரம்’ படத்துக்கு வெளியிடப்பட்ட டைட்டில் டீசரை போன்று தளபதி-67 படத்துக்கான ப்ரோமோ வீடியோவையும் தயார் செய்ய முடிவு செய்த படக்குழு அதற்கான படப்பிடிப்பை மூன்று நாட்கள் சென்னையில் நடத்தியது இதனிடையே தற்போது தளபதி 67 படக்குழு காஷ்மீர் சென்று வந்துள்ளது. கடந்த டிசம்பர் 16, 17 ஆம் தேதிகளில் காஷ்மீரில் ப்ரோமோக்கான ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளது. விரைவில் படத்திற்கான ப்ரோமோவை வெளியிட படக்குழு தீவிரம்.

அதன்பிறகு படப்பிடிப்பை 170 நாட்களில் முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த கையோடு 3 மாதங்களில் post production பணிகளை முடித்து அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிடவும் வாய்ப்புள்ளது.

MUST READ