spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இரட்டை வேடங்களில் களமிறங்கும் விஜய்....... வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்!

மீண்டும் இரட்டை வேடங்களில் களமிறங்கும் விஜய்……. வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவ பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகள் உடனும் உருவாகியுள்ள இப்ப படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 படமானது அரசியல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இதற்கு CSK என்ற தலைப்பு வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பல தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று தம்பியாக ஜெய் நடிக்கிறார் என்றும்
கூறப்படுகிறது.

we-r-hiring

இருந்த போதிலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன், கத்தி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களில் இரட்டை இடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ