வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி, தினேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் படப்பிடிப்பு முடிந்த பாடில்லை. இதில் ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாகம் படமாக்கப்படும் போதே இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளும் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு விடுதலை படத்தின் படக்குழுவினர் பேட்டி அளித்துள்ளனர். இந்த பேட்டியில் விஜய் சேதுபதி, ” நான் முதலில் விடுதலை 2 படத்தில் எட்டு நாட்கள் தான் நடிக்க சென்றேன் ஆனால் இப்போது 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் சில சவால்களின் காரணமாகவும் ஸ்கிரிப்ட் மாற்றத்தாலும் படப்பிடிப்பு இன்னும் தொடர்கிறது” என்று கூறியுள்ளார்.


