விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் 96 பாகம் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு 96 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இதனை பிரேம்குமார் இயக்கி இருந்தார். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் மென்மையான காதல் படத்தை கொடுத்திருந்தார் பிரேம்குமார். அந்த வகையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இன்றுவரையிலும் ராம் – ஜானு என்ற பெயர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களாகவே 96 பாகம் 2 உருவாகப் போவதாக சமூக வலைதளங்களை பல தகவல்கள் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் பிரேம்குமார் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார்.இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்புகளை சிங்கப்பூர், மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் தொடர்ந்து பல அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் 96 பாகம் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஜூன் மாதத்தில் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.