நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியாவை வர்ணித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி கடைசியாக ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது பாலாஜி தரணிதரன், பூரி ஜெகன்நாத் ஆகியோரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சின்ன வயசுல பீச்சில ஒரு சிலை பார்த்தேன். அதன் பிறகு ஆண்ட்ரியாவை பார்த்தேன். ரொம்ப வருஷமா அப்படியே இருக்கீங்க. அது எப்படின்னு தான் தெரியல. வெளிநாட்டில் இருந்து ஆட்களை வர வைத்து தான் இன்டர்வ்யூ எடுக்க வேண்டும்.
நரசூஸ் காபி விளம்பரத்தில் எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கீங்க. அப்பவும் யாருடா இந்த பொண்ணுன்னு? பார்த்தேன். இப்பவும் அப்படித்தான் பார்க்கிறேன். நாளைக்கு என் பையனும் பாப்பான் போல யாருடா இந்த பொண்ணுன்னு? வீட்டுக்கு போய் பிரிட்ஜ்ல உக்காருறீங்களா? பெட்ல படுக்குறீங்களா? என்று தெரியல வாழ்த்துக்கள்” என்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையும் பாடகிமான ஆண்ட்ரியா, பிசாசு 2, மனுஷி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்க் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


