நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது ட்ரெயின், ஏஸ், விடுதலை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தனது ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், அபிராமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த படம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி துபாயில் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இதை காண பலரும் திரண்டு வந்தனர். ஆனால் இது தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது விஜய் சேதுபதியின் வற்புறுத்தலால் தான் துபாய் புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா போஸ்டர் திரையிடப்பட்டதாம். ஏனென்றால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படம் புர்ஜ் கலீஃபா போன்ற உலகிலேயே மிக உயரமான கட்டடத்தில் படத்தின் போஸ்டரை திரையிட்டால் தனக்குப் பெருமையாக இருக்கும் என்றும் கூறினாராம். அதுமட்டுமில்லாமல் அந்த கட்டடத்தில் திரையிட வெறும் மூன்று நிமிடங்களுக்கு 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாம். இந்த தகவல் அறிந்த பலரும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியமடைந்துள்ளனர்.