விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதேசமயம் விஜய் சேதுபதி, ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், ஆறுமுக குமார் இயக்கத்தில் தன்னுடைய 51வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஏஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Get ready to be swooned by the new pair in K-Town!✨
The First Single #UrugudhuUrugudhu from #ACE drops tomorrow at 5 PM!#AceFirstSingle@VijaySethuOffl @rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @justin_tunes @iYogiBabu @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat pic.twitter.com/EBl83azkUJ— 7Cs Entertaintment (@7CsPvtPte) March 16, 2025
இந்த படத்தை 7CS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் ருக்மினி வசந்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த படத்தில் இருந்து ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடல் இன்று (மார்ச் 17) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.