Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' .... டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ …. டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி ஏஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' .... டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தலைவன் தலைவி, ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுகக் குமார் இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி வசந்த், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்து இருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' .... டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!இந்த படமானது வருகின்ற மே 23ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை (மே 11) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ