விஜய் சேதுபதியின் ஏஸ் பட முதல் நாள் கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் 51 வது படமாக உருவாகியிருந்த திரைப்படம் தான் ஏஸ். ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியிருந்த இந்த படம் நேற்று (மே 23) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மிணி வசந்த், யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், கேஜிஎஃப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர். 7CS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி – ருக்மிணி வசந்த் இடம்பெறும் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளன. அதேபோல் விஜய் சேதுபதி – யோகி பாபு காம்போவின் நகைச்சுவைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால் இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.