விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருந்த மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் படத்தின் வசூலும் அதிகரித்து செல்வதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி இந்த படம் 10 நாட்களில் 81 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீப காலமாகவே பெரும்பாலான மலையாள திரைப்படங்கள் குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரி குவித்தது. ஆனால் தமிழில் 2024 ஆம் ஆண்டில் வெளியான அரண்மனை, கருடன் போன்ற படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று அதை முறியடித்தது.
#Maharaja Roars Loud at the Box Office 🔥
Worldwide Gross 81.8 crores in Just 10 days 🫡#MegaBlockBusterMaharaja#MakkalSelvan @VijaySethuOffl
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP… pic.twitter.com/XjxMQcWjjR
— Passion Studios (@PassionStudios_) June 24, 2024
அந்த வரிசையில் தற்போது மகாராஜா திரைப்படமும் இணைந்து 2024 ஆம் ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறி உள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி ஐம்பதாவது படமான இந்த படம் விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. படத்தை காண தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 100 கோடியை தொட்டு விடும் என்று நம்பப்படுகிறது.