Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'PHOENIX' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘PHOENIX’ …. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் PHOENIX படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'PHOENIX' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்திய அளவில் வாரிசு நடிகர்கள் பலர் திரைத்துறையில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் நடிகர்களாக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருபவர்களும் உண்டு. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து
கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். அதாவது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் PHOENIX – வீழான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'PHOENIX' .... ரிலீஸ் தேதி அறிவிப்பு!பின்னர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ