விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தனுஷிற்கு பிறகு பாலிவுட்டில் கால் பதித்த இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் உடன் இவர் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதி மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே, சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் ரௌத்ரே மற்றும் ரமேஷ் தோரானி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.