spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் - பவதாரிணி குரலில் சின்ன சின்ன கண்கள்...... 'கோட்' படத்தின் மெலோடி பாடல் ரிலீஸ்!

விஜய் – பவதாரிணி குரலில் சின்ன சின்ன கண்கள்…… ‘கோட்’ படத்தின் மெலோடி பாடல் ரிலீஸ்!

-

- Advertisement -

நடிகர் விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.விஜய் - பவதாரிணி குரலில் சின்ன சின்ன கண்கள்...... 'கோட்' படத்தின் மெலோடி பாடல் ரிலீஸ்!

நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்த முடித்துள்ளார்.  ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் தயாராகி வரும் இந்த படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், இலங்கை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் - பவதாரிணி குரலில் சின்ன சின்ன கண்கள்...... 'கோட்' படத்தின் மெலோடி பாடல் ரிலீஸ்! இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா ,லைலா, மைக் மோகன் அஜ்மல் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் விசில் போடு எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து விஜயின் 50வது பிறந்த நாளான இன்று (ஜூன் 22) படத்தின் முன்னோட்ட வீடியோவை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

we-r-hiring

அதேசமயம் டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் சின்ன சின்ன கண்கள் எனும் இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி இருக்கும் நிலையில் மறைந்த பாடகி பவதாரணியின் குரல் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெலோடி பாடலாக வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது

MUST READ