நடிகை பிரியாமணி, ஜனநாயகன் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி. இவர் இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். அதைத்தொடர்ந்து இராவணன் போன்ற படங்களிலும் இவருடைய நடிப்பு பேசப்பட்டது. தற்போது இவர், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர், விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படமானது 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது.
#Priyamani about #JanaNayagan:
I’m a huge fan of #ThalapathyVijay
My portions are yet to begin shooting 👀pic.twitter.com/Xq309L3SIK
— Kolly Corner (@kollycorner) May 16, 2025

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றின் பேசிய பிரியாணி, “நான் விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகை. விஜய் சாரின் போர்ஷன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. என்னுடைய போர்ஷன் இனிதான் தொடங்க இருக்கிறது” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரியாமணி தன்னுடைய போர்ஷன் இனிமேல்தான் தொடங்க இருக்கிறது என்று தற்போது வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.