Homeசெய்திகள்சினிமாவிஜய் நடிக்கும் 'தி கோட்'.... ஸ்பார்க் சாங் ப்ரோமோ வெளியீடு!

விஜய் நடிக்கும் ‘தி கோட்’…. ஸ்பார்க் சாங் ப்ரோமோ வெளியீடு!

-

விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் மூன்றாவது பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய் நடிக்கும் 'தி கோட்'.... ஸ்பார்க் சாங் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் விஜய் கடந்தாண்டு வெளியான லியோ படத்திற்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரசிகர்கள் பலரும் சுருக்கமாக தி கோட் என்று சொல்லி வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மைக் மோகன் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவியிலும் இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இப்படம் 2024 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படக்குழு படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் இரண்டு பாடல்கள் என ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் ஸ்பார்க் சாங் எனும் மூன்றாவது பாடல் நாளை (ஆகஸ்ட் 3 அன்று) வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இதன் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலானது மகனாக நடிக்கும் விஜய்க்கும் மீனாட்சி சௌத்ரிக்கும் இடையிலான குத்து பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ