விஜய் நடிப்பில் உருவாகும் தி கோட் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது 67 வது படமான லியோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை இடங்களில் நடிக்க அவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க சித்தார்த்தா நுனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம், இலங்கை போன்ற பகுதிகளில் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து முதல் இரண்டு பாடல்களும் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அடுத்ததாக இதன் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தி கோட் படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


