spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கருப்பு' - 'ஜனநாயகன்' படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்!

‘கருப்பு’ – ‘ஜனநாயகன்’ படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் விஜய் – சூர்யா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களும் கூட. தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் நடிப்பில் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.'கருப்பு' - 'ஜனநாயகன்' படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்! அதேபோல் நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யாவின் நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் உருவாகியுள்ளது. அதில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. சூர்யாவின் ‘கருப்பு’ படமும் ஜனநாயகன் படத்துடன் மோதும் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பாக விஜய் – சூர்யாவின் வேறொரு படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யாவின் நடிப்பில் ப்ரண்ட்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தேவயானி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதாரவி, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. 'கருப்பு' - 'ஜனநாயகன்' படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்!அதிலும் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றுவரையிலும் பலருக்கும் ஃபேவரைட். மேலும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில் இந்த படம் விரைவில் 4K தரத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ