சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை அவதூறாக பேசி தாக்கிய வழக்கில் சின்னத்திரை நடிகர் வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டிக் டாக் பிரபலமான சூர்யா தேவியை கடந்த 2020 ஆம் ஆண்டில் அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் மிரட்டி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கின் அடிப்படையில் நாஞ்சில் விஜயனை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாஞ்சில் விஜயன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலங்களில் ஒருவராக இருந்து வரும் அவரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் அது இது எது, சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மீது அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையிலேயே வளசரவாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எழுந்துள்ள புகாரின் பெயரில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விசாரணை முடிந்த பிறகு தான் நாஞ்சில் விஜயன் மீது எந்த பிரிவிகளின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.