விஜய் டிவி பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் பல வருடங்களாகவே முக்கியமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவருடைய கலகலப்பான பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் பிரியங்கா தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இதற்கிடையில் தான் பிரியங்கா, கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
And she got her happily ever-after 🥺♥️🧿✨@Priyanka2804 #PriyankaDeshpande pic.twitter.com/B8gZL86IUY
— AllAboutPapri (@allaboutpapri) April 16, 2025
அதன் பிறகு இவர்களின் இல்லற வாழ்க்கை சுமூகமாக செல்ல, 6 வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் தான் பிரியங்கா தேஷ் பாண்டே வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது பிரியங்கா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இதனால் பிரியங்காவின் இரண்டாவது திருமணம் குறித்து தகவல் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இருப்பினும் இவருடைய திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களும் பிரியங்காவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.