spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமன்னாவின் நடிப்பை பாராட்டிய காதலன்... வாழ்த்து கூறிய விஜய் வர்மா...

தமன்னாவின் நடிப்பை பாராட்டிய காதலன்… வாழ்த்து கூறிய விஜய் வர்மா…

-

- Advertisement -
கோலிவுட்டின் திகில் திரைப்பட வரிசையில், முக்கிய படமாக மாறியது அரண்மனை. 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை உருவாக்கினார் இயக்குனர் சுந்தர்.சி. முதல் இரண்டு பாகங்கள் ஹிட் அடித்த நிலையில் மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இருப்பினும் அரண்மனை நான்காம் பாகத்திற்கான பணிகளை தொடங்கினார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படத்தில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி படத்திற்கு இசை அமைத்திருந்தார். அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் படத்தை தயாரித்து உள்ளன. இத்திரைப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், இரு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்திருந்த தமன்னாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. அவரது நடிப்பை அவரின் காதலர் விஜய் வர்மாவும் பாராட்டி இருக்கிறார். அரண்மனை படத்தில் சிறப்பாக நடித்த தமன்னாவுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் விஜய் வர்மா, தற்போது சூர்யாவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்கிறார்.

MUST READ