Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவு..... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஷால்!

விஜயகாந்த் மறைவு….. கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஷால்!

-

- Advertisement -

விஜயகாந்த் மறைவு..... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஷால்!நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலை 6.10 மணி அளவில் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்செய்தி வெளியானதும் தமிழகமே கண்ணீர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. விஜயகாந்தின் மறைவிற்கு பிரதமர் மோடி,மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ஸ்டாலின் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைப்பட பிரபலங்களான கமல்ஹாசன், எஸ் வி சேகர், தியாகராஜன், ரோகினி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், திரிஷா குஷ்பூ உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதல்களையும் விஜயகாந்தின் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் விஜயகாந்தின் மறைவு குறித்து கண்ணீர் விட்டு அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஷால், “என்னை மன்னித்து விடுங்கள் அண்ணன் இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். உங்கள் காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்தது என் தவறுதான். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயத்துக்கு நீங்கள் எவ்வளவோ உதவிகள் செய்து இருக்கிறீர்கள். அரசியல்வாதியையோ, நடிகர் சங்க முன்னாள் தலைவரையோ இழந்ததை விட ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

we-r-hiring

மேலும் விஜயகாந்த்தின் உடல் நாளை மாலை 4.45 மணியளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய இருக்கிறது.

MUST READ