spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயூடியூபில் சம்பவம் செய்த விஜயின் 'அரபிக் குத்து' பாடல்!

யூடியூபில் சம்பவம் செய்த விஜயின் ‘அரபிக் குத்து’ பாடல்!

-

- Advertisement -

விஜயின் அரபிக் குத்து பாடல் யூடியூபில் தரமான சம்பவம் செய்துள்ளது.யூடியூபில் சம்பவம் செய்த விஜயின் 'அரபிக் குத்து' பாடல்!நடிகர் விஜய் தற்போது தனது 69ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். யூடியூபில் சம்பவம் செய்த விஜயின் 'அரபிக் குத்து' பாடல்!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து எனும் பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.இந்த பாடல் தொடர்பாக வெளியான அசத்தலான ப்ரோமோ வீடியோவும் வைரலாகி வந்த நிலையில் இந்தப் பாடலும், குறுகிய நாட்களிலேயே அதிக பார்வைகளை கடந்த பாடல் என்ற பெருமையை பெற்றது. அதாவது இப்பாடல் வெளியான 15 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. யூடியூபில் சம்பவம் செய்த விஜயின் 'அரபிக் குத்து' பாடல்!அடுத்தது இப்பாடல் தற்போது வரை 70 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து தரமான சம்பவம் செய்துள்ளது. மேலும் இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர் என்பதும் சிவகார்த்திகேயன் இப்பாடல்வரிகளை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ