விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாரதிராஜா, அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி இந்த படம் பத்து நாட்களில் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக் குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் விரைவில் இந்த படம் 100 கோடியை தொட்டுவிடும் என்றும் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படம் அவருக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகனை விட திரைக்கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு இந்த படம் பல்வேறு தரப்பு நேரிடையே பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -