Homeசெய்திகள்சினிமா'கல்கி 2898AD' படம் மாஸ் காட்டியதா? இல்லையா?...... ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

‘கல்கி 2898AD’ படம் மாஸ் காட்டியதா? இல்லையா?…… ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

-

- Advertisement -

சலார் படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. 'கல்கி 2898AD' படம் மாஸ் காட்டியதா? இல்லையா?...... ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வினி இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். 'கல்கி 2898AD' படம் மாஸ் காட்டியதா? இல்லையா?...... ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

“கல்கி படத்தின் முதல் பாதி சயின்ஸ் பிக்சன் பொழுதுபோக்காக அமைந்துள்ள நிலையில் அதன் மேக்கிங் அருமையாக வந்துள்ளது. பிரபாஸ் மற்றும் புஜ்ஜியின் (கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருக்கிறார்) காம்போ மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் என்ட்ரி பட்டைய கிளப்புகிறது. இருப்பினும் திரைக்கதை இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம். முதல் பாதையில் கதாபாத்திரங்களின் அறிமுகங்களும் சில ஆச்சரிய கேமியோ ரோல்களும் தான் இடம்பெற்றுள்ளது” என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் லுக் மற்றும் அவருடைய வசனங்கள் பிரமாதமாக இருக்கிறது. இன்று வரையிலும் அவர் லெஜன்ட் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு ரசிகர், “உலகநாயகன் கமல்ஹாசன் வெறும் இரண்டே காட்சிகளில் தான் வருகிறார். ஆனால் வேற மாதிரி சம்பவம் செய்திருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ரசிகர் கல்கி படம் குறித்து, “படத்தின் கருத்தும் கதையும் சுவாரசியமாக செல்கிறது. இடைவெளிக் காட்சிகள் நன்றாக உள்ளது. ஆனால் சில இடங்களில் திரைக்கதை தொய்வடைகிறது. பிரபாஸின் காட்சிகள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. கமல்ஹாசன், அமிதாப் பச்சனின் காட்சிகள் மாஸாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது” என்று தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ