சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அடுத்தது நடிகர் விக்ரம், வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இதனை இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் தென்காசி, மதுரை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் படக்குழுவினர் வீர தீர சூரன் படத்தினை 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனராம். அதன்படி 2025 ஜனவரி 10ஆம் தேதி அன்று படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -