நடிகர் விக்ரம் தனது ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னுடைய லக்கை வேறுபடுத்தி காட்ட கடினமாக உழைப்பார். உடலை உருக்கி தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் உன்னத கலைஞன் தான் விக்ரம்.
அந்த வகையில் சேது, காசி, பிதாமகன் போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அடுத்ததாக விக்ரமின் புதிய பரிமாணத்தில் தங்கலான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதை தொடர்ந்து நாளை இதன் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பேட்டியில் தங்கலான் படம் குறித்தும் நடிகர் விக்ரம் குறித்தும் பேசி உள்ளார்.
“I have watched #Thangalaan copy & very HAPPY with the output. We are planning for AUGUST release. #ChiyaanVikram sir has given not only his Heard and soul, but everything for this Project”
– Producer GnanavelRaja pic.twitter.com/iTzhw6Ki8a— AmuthaBharathi (@CinemaWithAB) July 9, 2024
அவர் பேசியதாவது, “தங்கலான் காட்சிகளை பார்த்தேன். படத்தின் அவுட் புட் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் படத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். விக்ரம் சார் தங்கலான் படத்திற்காக இதயம் ஆன்மாவை மட்டுமல்லாமல் அனைத்தையும் கொடுத்திருக்கிறார்” என்று விக்ரம் குறித்து பேசியுள்ளார்.


