Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் விக்ரம்..... 'தங்கலான்' படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த படக்குழு!

இரட்டை வேடங்களில் விக்ரம்….. ‘தங்கலான்’ படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த படக்குழு!

-

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரட்டை வேடங்களில் விக்ரம்..... 'தங்கலான்' படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த படக்குழு!அதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இரட்டை வேடங்களில் விக்ரம்..... 'தங்கலான்' படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த படக்குழு!கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல் என அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) இதன் மூன்றாவது பாடலும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் படக்குழுவினர் மிக தீவிரமாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகர் விக்ரம், தங்கலான் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை படக்குழு மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இரட்டை வேடங்களில் விக்ரம்..... 'தங்கலான்' படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த படக்குழு!

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் தங்கலான் திரைப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. எனவே ஆகஸ்ட் 15-ல் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ