spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மார்கோ' படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்.... வெளியான புதிய தகவல்!

‘மார்கோ’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் விக்ரம், மார்கோ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மார்கோ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்.... வெளியான புதிய தகவல்!

சமீபத்தில் மலையாள சினிமாவில் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஹனீஃப் அடேனி இயக்கி இருந்தார். ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைக்க சந்துரு செல்வராஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தது. இருப்பினும் இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்கோ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்.... வெளியான புதிய தகவல்!மார்கோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் விக்ரம், நடிகர் உன்னி முகுந்தனை நேரில் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. எனவே இனிவரும் நாட்களில் மார்கோ படத்தின் ரீமேக் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மடோன் அஸ்வினி இயக்கத்தில் சியான் 63 படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ