தனக்கு உடல்நிலை சரியாக வேண்டி இல்லம் முன்பு பதாகையுடன் வந்த ரசிகரை எண்ணி விக்ரம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பார்வதி மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோனும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.
கோலார் தங்கச் சுரங்கம் கதைக்களத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் ஒத்திகையில் போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்ரமின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமடைந்து வர பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மிக்க நன்றி சிவா. 💛வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். I’ll be back. 😁 https://t.co/wcg7IdkHT2
— Vikram (@chiyaan) May 4, 2023
இந்நிலையில் விக்ரமின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் விரைவில் குணமடைய வேணும் என்று வேண்டி பதாகையுடன் அவர் வீட்டின் முன்பு காண்பாட்டார். அதைப் பகிர்ந்துள்ள விக்ரம் “மிக்க நன்றி சிவா.வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். I’ll be back.” என்று தெரிவித்துள்ளார்.