spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தங்கலான்' படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்.....தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!

‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

'தங்கலான்' படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்.....தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!நடிகர் விக்ரம், தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது, காசி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் விக்ரம்.

கடைசியாக விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரைன் நிறுவனமும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.'தங்கலான்' படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்.....தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!

we-r-hiring

தங்கலான் படமானது கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இப்படமானது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.'தங்கலான்' படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்.....தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தங்கலான் படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். “தங்கலான் படத்திற்கு மிகப்பெரிய ரிலீஸ் தேவைப்படுகிறது. சோலோ ரிலீஸ் தேதியாக இருந்தால் பிரமாதமாக இருக்கும். இன்டர்நேஷனல் லெவலில் இப்படத்தை மார்க்கெட் செய்ய வேண்டியுள்ளது. விக்ரம் சார், இந்த படத்தை பஞ்சாப் பீகார் போன்ற வட மாநிலங்களில் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது யுனிவர்சல் கதை என்பதால் எல்லா இடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். பிரமோஷனுக்கு பிளான் பண்ணுங்க. அந்தந்த ஊர்களுக்கு வர தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார் விக்ரம் சார். மலேசியா, துபாயிலும் ப்ரொமோஷன் பண்ணலாம் என்று விக்ரம் சார் கூறினார். இவ்வளவு இடங்களுக்கும் ப்ரமோஷன் செய்ய இருப்பதனால் எங்களுக்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதே சமயம் இந்த படத்தை விடுமுறை நாட்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார்.

MUST READ