விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகி அனுஷ்காவுடன் இணைந்து காட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், சண்முகப்ரியன் இயக்கத்தில் லவ் மேரேஜ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு தவிர சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மதன் கிறிஸ்டோபர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையில் இப்படம் 2025 கோடையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீஸ் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படமானது அடுத்த மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.